மேலும் செய்திகள்
தினமலர் செய்தி; ஒளிர்ந்தது விளக்கு
03-Oct-2025
திருத்தணி மருத்துவமனை கழிப்பறைகள் பளிச்
26-Sep-2025
படப்பை மேம்பாலத்தில் தார் சாலை அமைப்பு
26-Sep-2025
திருப்பூர்;'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, திருப்பூர் - தாராபுரம் ரோட்டிலுள்ள பேக்கரியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தி, 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.திருப்பூர் - தாராபுரம் ரோட்டில் உள்ள ஒரு பேக்கரியில், காலாவதி குளிர்பானம் விற்கப்படுவதாகவும், அந்த பேக்கரி மீது உணவு பாதுகாப்பு ஆய்வாளர் நடவடிக்கை எடுக்க வில்லை எனவும், நேற்றுமுன்தினம் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான குழுவினர், திருப்பூர் - தாராபுரம் ரோட்டிலுள்ள ஒரு பேக்கரியில் நேற்று அதிரடி ஆய்வு நடத்தினர்.ஏற்கனவே பிளாஸ்டிக் பயன்படுத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக மீண்டும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பை, ஸ்பூன் பயன்படுத்தியதற்காக, 5 ஆயிரம் ரூபாய்; சுகாதாரமற்ற முறையில் தின்பண்டங்கள் விற்றதற்காக ஆயிரம் ரூபாய் என, 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. உரிமம் பெறாமல் உணவு பொருட்கள் தயாரித்ததால், பேக்கரிப்பொருள் உற்பத்திக்கூடம் மூடப்பட்டு, நோட்டீஸ் வழங்கப்பட்டது.காலாவதி தேதி குறிப்பிடாத 10 லிட்டர் குளிர்பானம்; 2 கிலோ பிரட்; 3 கிலோ தின்பண்டங்கள் பறிமுதல் செய்து, அழிக்கப்பட்டது. கலப்பட டீத்துாள் பறிமுதல்
வெள்ளியங்காடு அருகே, 'கிருஷ்ணா ஸ்டோர்ஸ்' என்ற கடையில் நடத்திய ஆய்வில், 156 கிலோ கலப்பட டீ துாள் பாக்கெட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மாதிரி டீ துாள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதேகடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்பட்டதையடுத்து, 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் கடை உரிமையாளர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
- விஜயலலிதாம்பிகை, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்.
03-Oct-2025
26-Sep-2025
26-Sep-2025