மேலும் செய்திகள்
தினமலர் செய்தி; ஒளிர்ந்தது விளக்கு
03-Oct-2025
திருத்தணி மருத்துவமனை கழிப்பறைகள் பளிச்
26-Sep-2025
படப்பை மேம்பாலத்தில் தார் சாலை அமைப்பு
26-Sep-2025
ஊட்டி:ஊட்டியில், பாரம்பரிய கலெக்டர் அலுவலகம் வளாகத்தில், விதிமீறி கட்டப்பட்ட கட்டடம் 'தினமலர்' செய்தி எதிரொலி யால் அதிரடியாக இடிக்கப்பட்டது.ஊட்டியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கலெக்டர் அலுவலக கட்டடம், அவ்வப்போது பழமை மாறாமல் பொலிவுப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன், கலெக்டர் அலுவலகம் செல்லும் நுழைவு வாயில் பகுதியில் விதி மீறி புதிய கட்டடம் கட்டப்பட்டது. பழமையான கலெக்டர் அலுவலக கட்டடத்தின் பொலிவு பாதிக்கும் வகையில், கட்டப்பட்ட இந்த புதிய கட்டடத்தை அகற்ற வேண்டும். என, பல்வேறு அமைப்பினர் கலெக்டருக்கு புகார் அனுப்பினர். பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில், கட்டடம் அகற்றப்படாமல் இருந்தது. ஏற்கனவே, 'ஊட்டி -200' விழாவுக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், ஊட்டியில் உள்ள பாரம்பரிய கட்டடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்க நிதி ஒதுக்கியதுடன், கட்டடங்களில் பொலிவு பாதிக்கும் வகையில் எவ்வித கட்டுமானமும் இருக்கக்கூடாது என அறிவு றுத்தினார். முதல்வரின் உத்தரவை மீறும் வகையில், பாரம்பரிய கட்டடங்களின் முன் விதி மீறிய கட்டடங்கள் கட்டுப்பட்டிருந்தது உள்ளூர் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் ஜூன், 21ம் தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக கலெக்டர் உத்தரவுப்படி அந்த கட்டடம் நேற்று இடிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை, பொதுநல அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.
03-Oct-2025
26-Sep-2025
26-Sep-2025