தினமலர் செய்தி எதிரொலி
மேலுார் : மேலுார் தாலுகா அலுவலக வளாகத்தில் கட்டுமான பணி நடக்கிறது. மின்கம்பம் ஊன்றிய போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகியது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் தலைமையில் குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டது.