உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தி எதிரொலி; சமுதாயக்கூடம் சீரமைப்பு

தினமலர் செய்தி எதிரொலி; சமுதாயக்கூடம் சீரமைப்பு

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் தினமலர் செய்தி எதிரொலியாக குப்பைக் கிடங்கு சமுதாயக்கூடம் சீரமைக்கப்பட்டது.இப்பேரூராட்சியில் 17 வது வார்டு கக்கன் நகரில் சமுதாயக் கூடம் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு சீமைக்கருவேல மரங்கள் மண்டி வளர்ந்திருந்தது. அருகேயுள்ள குப்பைக்கிடங்கில் கொட்டப்படும் கோழி, மீன்கழிவு முறையாக பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசியது. இது குறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்திருந்தனர். தினமலரில் இச்செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பேரூராட்சி நிர்வாகம் குப்பைக் கிடங்கில் கழிவுகளை முறையாக கையாண்டு புதைத்தனர்.சமுதாயக்கூடத்தை சுற்றி வளர்ந்திருந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றி மண்டபத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ