உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / சித்தலுார் கோவிலில் அடிப்படை வசதிகள் தினமலர் செய்தி எதிரொலி

சித்தலுார் கோவிலில் அடிப்படை வசதிகள் தினமலர் செய்தி எதிரொலி

கள்ளக்குறிச்சி: சித்தலுார் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கள்ளக்குறிச்சி அடுத்த சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் அடிப்படை வசதி இல்லாமல் அவதிப்படுவது குறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதன் எதிரொலியாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இக்கோவிலில் அதிநவீன கழிவறை, குளியலறை, மாற்றுத்திறனாளிகள் கழிவறை கட்டுவதற்கு ரூ.50 லட்சம் நிதிக்கான மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் பொறியாளர்களால் தல ஆய்வு நடத்தி தயாரிக்கப்பட்டுள்ள மதிப்பீட்டு அறிக்கைக்கு அனுமதி பெற்று விரைவில் பணிகள் துவங்கும் என ஆதிதிருவரங்கம், அரங்கநாத சுவாமி திருக்கோவிலின் செயல் அலுவலர் பாக்கியராஜ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ