மேலும் செய்திகள்
தினமலர் செய்தி; ஒளிர்ந்தது விளக்கு
03-Oct-2025
திருத்தணி மருத்துவமனை கழிப்பறைகள் பளிச்
26-Sep-2025
படப்பை மேம்பாலத்தில் தார் சாலை அமைப்பு
26-Sep-2025
வடவள்ளி:தினமலர் செய்தி எதிரொலியாக, வடவள்ளி மற்றும் தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள மரங்களை, மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டி அகற்றினர்.கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில், ஆடிக்காற்றின் வேகம் இன்னும் கூடுதலாக காணப்படுகிறது. இதனால், வேகமாக வீசும் காற்றில், ஏராளமான மரங்கள் முறிந்து விழுகின்றன. இந்நிலையில், வடவள்ளி பகுதியில், தொண்டாமுத்தூர் ரோடு, குருசாமி நகரில் உள்ள பட்டுப்போன மரம், வடவள்ளி, மருதமலை ரோட்டில், சாய்ந்த நிலையில் உள்ள மரம் மற்றும் இன்னும் பல இடங்களில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்கள், மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இதனை, வெட்டி அகற்ற வேண்டும் என, நேற்றுமுன்தினம் நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து வடவள்ளியில், மருதமலை ரோடு, ஸ்ரீராம் அவென்யூ அருகில் உள்ள தென்னை மரங்கள், குருசாமி நகரில் இருந்த மரம் என, ஆபத்தான நிலையில் இருந்த மரங்களை, மாநில நெடுஞ்சாலைத்துறையினர், மாநகராட்சியினர், வருவாய்த்துறையினருடன் இணைந்து அகற்றினர்.
03-Oct-2025
26-Sep-2025
26-Sep-2025