உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / சாக்கடை மூடி சீரமைப்பு

சாக்கடை மூடி சீரமைப்பு

புழுதிவாக்கம்:பெருங்குடி மண்டலம், வார்டு 186, புழுதிவாக்கம், பாலாஜி நகர் விரிவு, 18வது தெருவில் கடந்த மாதம் புதிய சாலை அமைக்கப்பட்டதால், அந்த வழித்தடத்தில் உள்ள, இரண்டு பாதாள சாக்கடை இயந்திர நுழைவு, அரை அடி ஆழம் உள்வாங்கின.இதனால், சாலையை ஒட்டியுள்ள தனியார் பள்ளி மாணவர்கள், உள்வாங்கிய பள்ளத்தில் இடறி விழுந்து காயமடைவதும், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதும் நடப்பதாக, நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, ஊழியர்களை வைத்து, இரு இயந்திர நுழைவாயில்களையும் சிமென்ட் கலவையால் நிரப்பி, சரி செய்தனர். இதனால் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை