மேலும் செய்திகள்
திருத்தணி மருத்துவமனை கழிப்பறைகள் பளிச்
26-Sep-2025
படப்பை மேம்பாலத்தில் தார் சாலை அமைப்பு
26-Sep-2025
சின்னசாமிநகரில் குப்பை அகற்றி சீரமைப்பு
24-Sep-2025
கோவில்பாளையம்:'தினமலர்' செய்தி எதிரொலியாக, அதிகாரிகள் குடிநீரை பரிசோதித்தனர். சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம், கொண்டையம் பாளையம் மற்றும் அத்திப்பாளையம் ஊராட்சிகளில், 60 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளன. அத்திக்கடவு நீர் வழங்கப்பட்டு வருகிறது. இங்கு வழங்கப்படும் குடிநீர் சுவை இல்லாமல் ஒருவித வாசம் வீசுகிறது. சில நாட்களிலேயே புழு உற்பத்தி ஆகிறது என, மக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து நேற்று,'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.இதைத் தொடர்ந்து நேற்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி பொறியாளர் சண்முகம், எஸ்.எஸ்.குளம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டோர் கொண்டையம்பாளையம் மற்றும் அத்திப்பாளையத்தில் மேல்நிலைத் தொட்டிகளில் ஆய்வு செய்தனர்.அதில் உள்ள குடிநீரை பரிசோதித்தனர். ஆய்வகத்தில் பரிசோதிப்பதற்காக மூன்று இடங்களில் குடிநீர் மாதிரி எடுத்துச் சென்றனர்.ஊராட்சி தலைவர் சுபத்ரா கூறுகையில், ''குடிநீரை பரிசோதித்த அதிகாரிகள் துாய்மையாக தான் உள்ளது. எனினும் நுண்பரிசோதனை ஆய்வகத்தில், ஆய்வு செய்து தெரிவிக்கப்படும், என்று கூறியுள்ளனர்,'' என்றார்.
26-Sep-2025
26-Sep-2025
24-Sep-2025