உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ரூ.59 லட்சம் வாடகை பாக்கி விவகாரம்: தினமலர் செய்தி எதிரொலியாக அறநிலையத்துறை செலுத்த முயற்சி

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ரூ.59 லட்சம் வாடகை பாக்கி விவகாரம்: தினமலர் செய்தி எதிரொலியாக அறநிலையத்துறை செலுத்த முயற்சி

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஹிந்து சமய அறநிலையத்துறை ரூ.59 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்தது குறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக அதை செலுத்துவதற்கான முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.மீனாட்சி அம்மன் கோயில் இடங்களில் ஒன்றான எல்லீஸ்நகரில் மண்டல அறநிலையத்துறை இணைகமிஷனர் அலுவலகம் 2017 முதல் வாடகைக்கு இயங்குகிறது. இதுநாள் வரை கோயில் நிர்வாகத்திற்கு வாடகையாக மொத்தம் ரூ.59 லட்சத்தை செலுத்தாதது குறித்து நேற்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதருக்கு மண்டல இணைகமிஷனர் செல்லத்துரை அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அதில், வாடகை பாக்கியை அரசிடம் இருந்து பெற்றுத்தருமாறு மீனாட்சி கோயில் இணை கமிஷனர் கிருஷ்ணனிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. வாடகை பாக்கியை விரைந்து பெற்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மண்டல இணைகமிஷனர் அலுவலக கட்டடம் அமைந்துள்ள இடம் மீனாட்சி அம்மன் கோயிலுக்குரியது. இக்கோயில் உட்பட சில கோயில்களின் நிதியில் இருந்து கட்டடம் கட்டப்பட்டது. விரைவில் அரசிடம் நிதி பெற்று கட்டடம் கட்டியதற்கான தொகையை சம்பந்தப்பட்ட கோயில்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வாடகை பாக்கி ரூ.59 லட்சம் மீனாட்சி கோயில் நிர்வாகத்திற்கு செலுத்தப்படவுள்ளது. இனி மாத வாடகையாக ரூ.90 ஆயிரம் செலுத்தப்படும்.ஏற்கனவே மேல - தெற்கு சித்திரை வீதியில் கோயில் இடத்தில் மண்டல இணைகமிஷனர் அலுவலகம் இயங்கியதற்கான வாடகை மொத்தம் ரூ.60 லட்சம் சமீபத்தில்தான் மீனாட்சி கோயில் நிர்வாகத்திற்கு செலுத்தப்பட்டது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ஆரூர் ரங்
செப் 04, 2024 12:27

கோவில் நிதியில் அரசு கட்டிடம் கட்டியது குற்றம். அறங்காவலர்களை நியமிக்காமல் அதிகாரிகளே தக்கார் பதவியை துஷ்பிரோகம் ?.கோர்ட் உடனே நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அமைச்சரை சிறைக்கு அனுப்ப வேண்டும்.


புதிய வீடியோ