உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / கோட்ட நெடுஞ்சாலைத்துறைக்கு புது ரத்தம்; அதிகாரிகள் மாற்றம்

கோட்ட நெடுஞ்சாலைத்துறைக்கு புது ரத்தம்; அதிகாரிகள் மாற்றம்

கோவை;மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு கோவை கோட்ட பொறியாளராக, மதுரையில் இருந்து மாறுதலாகி வந்துள்ள ஞானமூர்த்தி பொறுப்பேற்றார்.கோவை கோட்ட நெடுஞ்சாலைத்துறைக்கு ஒதுக்கப்படும் பணிகளை, கான்ட்ராக்டர்கள் பெயரில் அதிகாரிகளே டெண்டர் எடுத்து, நிதியை எடுத்துக் கொள்வதாக புகார் எழுந்தது. இது குறித்து நமது நாளிதழில் செய்தி வெளியானது.இதன் உண்மைத்தன்மை அறிய, விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. விசாரித்த கமிட்டியினர் அதிகாரிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சுமத்தி, அறிக்கை சமர்ப்பித்தனர். இதைத்தொடர்ந்து, கோவை கோட்டத்துக்கு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

யார், யார் நியமனம்?

கோவை கோட்ட பொறியாளராக ஞானமூர்த்தி நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்றுள்ளார். இவர், மதுரையில் இருந்து மாறுதலாகி வந்திருக்கிறார். இதற்கு முன் பணிபுரிந்த பிரசன்ன வெங்கடேசன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.உதவி கோட்ட பொறியாளர் (வடக்கு) சோளவழந்தான் பரமக்குடிக்கு மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக, திருச்சியில் இருந்து ஹரிகிருஷ்ணன் வந்திருக்கிறார். உதவி கோட்ட பொறியாளர் (தெற்கு) ஆறுமுகத்துக்கு பதிலாக, பொள்ளாச்சியை சேர்ந்த தங்க அழகர் ராஜா நியமிக்கப்பட்டு உள்ளார். ஆறுமுகம், சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.மாநில நெடுஞ்சாலைத்துறை (கிராமச் சாலைகள்) உதவி கோட்ட பொறியாளர் ரஜினிகாந்த் மேட்டுப்பாளையத்துக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். இப்பணியிடம், திருப்பூரில் பணிபுரியும் உதவி கோட்ட பொறியாளர் சண்முகநாதனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு இருக்கிறது. மேட்டுப்பாளையத்தில் பணிபுரிந்த உதவி கோட்ட பொறியாளர் குமரன், சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவில் சிறப்பு திட்டங்கள் (உக்கடம் மேம்பாலம், மேற்குப் புறவழிச்சாலை) கவனித்து வந்த உதவி கோட்ட பொறியாளராக பணிபுரிந்த மணிவண்ணன் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக, சிறப்பு திட்டங்கள் (அவிநாசி ரோடு மேம்பாலம்) உதவி கோட்ட பொறியாளர் ராஜா நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்றார்.இதேபோல், உதவி பொறியாளர்கள் பலரும் வெவ்வேறு நகரங்களுக்கு இட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ