மேலும் செய்திகள்
தினமலர் செய்தி; ஒளிர்ந்தது விளக்கு
03-Oct-2025
திருத்தணி மருத்துவமனை கழிப்பறைகள் பளிச்
26-Sep-2025
படப்பை மேம்பாலத்தில் தார் சாலை அமைப்பு
26-Sep-2025
பூந்தமல்லி:பூந்தமல்லி நகராட்சியின் பிரதான சாலையாக, டிரங் சாலை உள்ளது. இதன் வழியே தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.கிண்டி முதல் பூந்தமல்லி வரை, மெட்ரோ ரயில் இயக்குவதற்கு, டிரங் சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. இதனால், இந்த சாலை குறுகலாகி, போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது.இந்நிலையில், பூந்தமல்லி பேருந்து நிலையம் முதல் குமணன்சாவடி வரையிலான டிரங் சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.சேதமான சாலையை சீரமைக்க வேண்டும் என, நம் நாளிதழில் புகார் பெட்டி பகுதியில், படத்துடன் கூடிய செய்தி வெளியானது. இதையடுத்து நெடுஞ்சாலைதுறையினர், போக்குவரத்துக்கு ஏற்றபடி, இந்த சாலையை சீரமைத்து உள்ளனர்.
03-Oct-2025
26-Sep-2025
26-Sep-2025