மேலும் செய்திகள்
தினமலர் செய்தியால் தண்ணீர் திறப்பு
16-Dec-2025
பூண்டி கூட்டு சாலையில் மின் விளக்கு சீரமைப்பு
14-Dec-2025
கோத்தகிரி;கோத்திகிரி பஸ் நிலையத்தில் பயணியர் நிழற்கூரையில் இருக்கைகள் அமைக்கப்பட்டன.கோத்தகிரியில் இருந்து, ஊட்டி, குன்னூர் உட்பட, கிராமப்புறங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும், கிராமப்புறங்களில் இருந்து, மருத்துவம் மற்றும் கல்வி சம்பந்தமாக சமவெளி பகுதிகளுக்கு சென்று வரும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகம் உள்ளது. இந்நிலையில், ஊட்டி மற்றும் கக்குச்சி பஸ் நிறுத்தத்தில், மழை மற்றும் வெயில் நாட்களில் மக்கள் ஒதுங்க ஏதுவாக, ஒருங்கே, 50 பேர் அமரும் வகையில், பேரூராட்சி நிர்வாகம் விசாலமாக அமைத்துள்ளது. இதில், ஒரு வரிசை இருக்கைகள் உடைந்திருந்ததால், பயணிகள் அமர முடியாமல், நிற்க வேண்டிய நிலை இருந்தது.இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அடுத்து, கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில், உடைந்த இருக்கைகள் பழுது பார்க்கப்பட்டு, நிழற்கூரையில் அமைக்கப்பட்டன.
16-Dec-2025
14-Dec-2025