மேலும் செய்திகள்
திருத்தணி மருத்துவமனை கழிப்பறைகள் பளிச்
26-Sep-2025
படப்பை மேம்பாலத்தில் தார் சாலை அமைப்பு
26-Sep-2025
சின்னசாமிநகரில் குப்பை அகற்றி சீரமைப்பு
24-Sep-2025
திருவள்ளூர்:திருவள்ளூர் பஜார் வீதி, வடக்கு ராஜ வீதியை இணைக்கும் வகையில், பெருமாள் செட்டி தெரு உள்ளது. இந்த தெருவில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் தார்ச்சாலை அமைக்கப்பட்டது.அப்போது, சாலை நடுவில் அமைக்கப்பட்டிருந்த பாதாள சாக்கடை குழாயில், அடைப்பை சீர்படுத்துவதற்காக, 'மேன்ஹோல்' அமைக்கப்பட்டு, அதன்மேல் இரும்பால் ஆன மூடி போடப்பட்டது.இந்த நிலையில், திருவள்ளூர் நகரில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, பெருமாள் செட்டி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபம் மற்றும் தனியார் பள்ளி எதிரில், நேற்று முன்தினம் சாலை நடுவில் சாலை உள்வாங்கி பெரிய பள்ளம் ஏற்பட்டது.இதுகுறித்து நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலை பள்ளத்தை சீரமைத்தது.
26-Sep-2025
26-Sep-2025
24-Sep-2025