உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / சுக்கிரவார்பட்டி, அதிவீரன்பட்டியில் தடையின்றி மின்சாரம் வினியோகம் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலி

சுக்கிரவார்பட்டி, அதிவீரன்பட்டியில் தடையின்றி மின்சாரம் வினியோகம் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலி

சிவகாசி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சிவகாசி அருகே சுக்கிரவார்பட்டி, அதிவீரன்பட்டியில் சீரான மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டது.சிவகாசி அருகே சுக்கிரவார்பட்டி அதிவீரன்பட்டியில் 2000 த்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் ஒரு மாதமாக இரவில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் வரை மின்தடை ஏற்பட்டதால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். கோடை வெயிலால் சிரமப்படும் நிலையில் இரவில் ஏற்படும் மின்தடையால் மக்கள் மின்விசிறிகளை இயக்க முடியவில்லை.இப்பகுதியில் பகலிலும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. எனவே தங்கு தடை இன்றி சீரான மின்சாரம் வினியோகம் செய்ய வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மின் துறையினர் அப்பகுதியில் உள்ள மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மரை சூழ்ந்திருந்த சீமை கருவேல மரங்கள், முட்புதர்களை அகற்றி பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர். டிரான்ஸ்பார்மரில் இருந்து மின்கம்பங்கள் வழியாகச் செல்லும் மின் வயர்கள் புதிதாக மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியினர் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை