உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி /  வேகமெடுத்த வளர்ச்சி திட்டப் பணிகள்

 வேகமெடுத்த வளர்ச்சி திட்டப் பணிகள்

ராமநாதபுரம்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ராமநாதபுரம் சக்கரக்கோட்டை ஊராட்சியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் வேகமெடுத்துள்ளன. ராமநாதபுரம் நகராட்சியை ஓட்டியுள்ள புறநகர் பகுதிகள் ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதனால் அந்தப் பகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுதவதாக தினமலர் நாளிதழ் குடியிருப்போர் குரல் பகுதியில் ஜூலை 5 ல் செய்தி வெளியானது. இந்நிலையில் சக்கரக்கோட்டை ஊராட்சி செந்தமிழ் நகர், மணிநகர், தென்றல் நகர், அமீர் நகர், முத்தமிழ் நகர் பகுதிகளில் உள்ள ஏரிகளை துார்வாரும் பணி துவங்கியுள்ளது. குடிநீர் வசதிக்காக ஜல்ஜீவன் திட்டத்தில் குழாய் பதிக்கும் பணியை விரைந்து முடிப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்குவதற்காக புதிய மின்மாற்றிகள் அமைக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை