பருவநிலை மாற்றத்தால் நெல் மகசூல் பாதிக்கும் வேளாண் துறை அதிகாரிகள் தகவல்
தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில், நடப்பு நவரை பருவத்தில் நெல் சாகு-படி பரப்பு, 29,746 அதிகரித்த நிலையில், பருவநிலை மாற்-றத்தால் மகசூல் குறைந்ததால், விவசாயிகள் பாதித்துள்ளனர்.எனவே விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் காரணம் காட்டாமல், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, விவசாயிகளின் கோரிக்கை குறித்து, நம் 'காலைக்கதிர்' நாளிதழில் கடந்த, 8ம் தேதியன்று செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, தர்மபுரி மற்றும் நல்லம்பள்ளி வட்டா-ரத்தில் உள்ள நெல் வயல்களில், வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி செந்தில்குமார், தர்மபுரி வேளாண் இணை இயக்-குனர் பழனிசாமி, துணை இயக்குனர்கள் ரத்தினம், ராஜகோபால், உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) சிவசங்கரி, நல்லம்பள்ளி மற்றும் தர்மபுரி வட்டார வேளாண் உதவி இயக்குனர்கள் சரோஜா, தினேஷ் மற்றும் நல்லம்பள்ளி உதவி விதை அலுவலர் கோவிந்தன் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடந்த, 2 நாட்க-ளாக கள ஆய்வு மேற்கொண்டனர்.இது குறித்து, வேளாண் இணை இயக்குனர் பழனிசாமி வெளி-யிட்ட அறிக்கை: நெல் வயல்களை கள ஆய்வு செய்தபோது, நெற்பயிர்கள் பருவம் தவறி நடவு செய்ததால், துார்கள் குறைந்த-ளவே காணப்பட்டது. பூக்கும் பருவத்தில் பனியின் தாக்கம் அதி-கமானதால், மகசூல் குறைய காரணமாக இருந்தது. மாவட்-டத்தில் கடந்த, 2 மாதங்களாக இரவில் கடும் குளிரும், பகலில் அதிக வெப்பமும் நிலவுவதால், நெற் பயிரில் மகரந்த சேர்க்கை பெரும்பாலும் பாதிக்கப்படுகிறது. நெற்பயிரில் பூ பூக்கும் போது, வெப்பநிலை அதிகமாக இருந்தால் அது மலட்டு தன்-மைக்கு வழிவகுத்து தானிய உற்பத்தி பாதிக்கப்படும். பகல் நேர வெப்பநிலையை விட, இரவு நேர வெப்பநிலை பயிர்களில் அதிக சேதத்தை ஏற்படுத்தும். தாவரங்கள் இரவில் சூடாக இருக்-கும்போது, வேகமாக சுவாசிக்கின்றன. இதனால், வெப்பநிலை அதிகரித்து நெல் மகசூல் பாதிப்பு அடையக்கூடும். காலநிலை மாற்றம் மற்றும் மழை பொழிவை பொருத்து மகசூல் பாதிக்கப்-படும்.எனவே, விவசாயிகள் உரிய பருவத்திற்கு ஏற்ற ரகங்களை பயி-ரிட வேண்டும். மேலும், விவசாயிகள் கார், சம்பா மற்றும் நவரை பருவத்தில், பயிர் காப்பீடு செய்து இழப்பீடு பெற்று கொள்ளலாம். நடப்பு கார் பருவத்தில் நெற்பயிருக்கு, 427 விவ-சாயிகளுக்கு, 21.48 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. சம்பா பருவத்தில், 2,560 ஹெக்டேர் பரப்பளவிற்கு நெல், ராகி, நிலக்கடலை மற்றும் மக்காச்சோளம் பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.