உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / கழிவுநீர் விரைந்து வெளியேறும் வகையில் கால்வாய் சீரமைப்பு

கழிவுநீர் விரைந்து வெளியேறும் வகையில் கால்வாய் சீரமைப்பு

மதுராந்தகம்:நம் நாளிதழ் செய்தி எதிரொலியால் மதுராந்தகத்தில், கழிவுநீர் விரைந்து வெளியேறும் வகையில், கால்வாய் துார்வாரி சீரமைக்கப்பட்டது. மதுராந்தகம் ஏரிக்கரையில் இருந்து மாம்பாக்கம் ரயில்வே பாலம் வரை, கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கான்கிரீட் கால்வாயாக அமைக்காததால், பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கியது. குறிப்பாக, மதுராந்தகம் நகரில், ஹிந்து சமய அறநிலைய துறைக்குச் சொந்தமான கோவில் நிலம் உள்ள பகுதியில், இந்த கழிவுநீர் கால்வாயில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கியது. அதில் பிளாஸ்டிக் குப்பையும் குவிந்திருந்ததால் பன்றிகள் கிளறி கடும் துர்நாற்றம் வீசியது. கழிவுநீர் விரைந்து வெளியேறும் வகையில், நிரந்தர தீர்வாக கான்கிரீட் கழிவுநீர் கால்வாய் அமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நேற்று, கழிவுநீர் கால்வாயில் இருந்த குப்பையை அகற்றி, துார்வாரி சீரமைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை