உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தியால் காவிரி கூட்டு குடிநீர்

தினமலர் செய்தியால் காவிரி கூட்டு குடிநீர்

மேலுார்:திருச்சி குளித்தலையில் ஆழ்குழாய் அமைத்து கொண்டு வரப்படும் காவிரி கூட்டு குடிநீரை சொக்கம்பட்டி நீரேற்றுநிலையத்தின் மூலம் விநியோகிக்கப்படும். இந்நிலையத்திற்கு மும்முனை மின் இணைப்பை மின்வாரிய துறையினர் நிறுத்தினர். அதனால் கொட்டாம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட 27 ஊராட்சிகளுக்கு ஒருவாரமாக காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகிக்காததால் மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நீரேற்று நிலையத்திற்கு மும்முனை இணைப்பு மின்சாரம் வழங்கப்பட்டு அனைத்து ஊராட்சிகளுக்கும் குடிநீர் விநியோகிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !