உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / திருவொற்றியூர் நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி

திருவொற்றியூர் நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி

திருவொற்றியூர்: திருவொற்றியூர் சுங்கச்சாவடி - விம்கோ நகர் வரையிலான, 5 கி.மீ., துார திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், நடைபாதையை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால், பாதசாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, நேற்று மதியம், திருவொற்றியூர் மண்டல அதிகாரிகள் தலைமையில் ஊழியர்கள், திருவொற்றியூர் நடைபாதையை ஆக்கிரமித்திருந்த ஆறு தள்ளுவண்டி கடைகள் உட்பட 22 நடைபாதை ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை