மேலும் செய்திகள்
ஊராட்சி மன்ற பழைய கட்டடம் இடிக்க கோரிக்கை
08-Mar-2025
உளுந்தை,:கடம்பத்துார் ஒன்றியம் உளுந்தை ஊராட்சி மன்ற அலுவலகம் கடந்த 2022ல் ஏற்பட்ட மழையில் சேதமடைந்தது. இதையடுத்து ஊராட்சி மன்ற அலுவலகம் கிராம இ -- சேவை மையத்தில் செயல்பட்டு வந்தது இதையடுத்து தேசிய கிராம சுயாட்சி திட்டத்தின் கீழ் 20.75 ரூபாய் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணி துவங்கியது.பணிகள் நிறைவடைந்து ஓராண்டாகியும் திறப்பு விழா நடத்தாமல் பயன்பாட்டிற்கு வராமல் இருந்தது.இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நேற்று ஊராட்சி மன்ற அலுவலகம் சுத்தம் செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.
08-Mar-2025