உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தி எதிரொலி அடர் வனத்தில் இருந்து நீர்தேக்க தொட்டிக்கு விடியல்

தினமலர் செய்தி எதிரொலி அடர் வனத்தில் இருந்து நீர்தேக்க தொட்டிக்கு விடியல்

முகப்பேர், அம்பத்துார் மண்டலத்துக்குட்பட்ட, முகப்பேர் கிழக்கு, டி.எஸ் கிருஷ்ணா நகரில், சென்னை குடிநீர் வாரியத்தில் பகுதி அலுவலகம் உள்ளது. அலுவலக பின்புறம் ராட்சத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது.இந்த தொட்டிக்கு செல்லும் படிக்கட்டிலும், அதை சுற்றியும் செடிகள் படர்ந்து, அடர்வனம் போல் இருந்தது.இதுகுறித்து, நம் நாளிதழில், இம்மாதம் 8ம் தேதி, புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, பகுதி குடிநீர் வாரிய அதிகாரிகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுற்றிலும் வளர்ந்திருந்த செடிகளை அகற்றினர். இதனால், அப்பகுதி சுத்தமாக மாறியது.இருப்பினும், அகற்றப்பட்ட செடிகளின் ஒரு பகுதி, அங்கேயே தேக்கி வைக்கப்பட்டுள்ளது. மரக்கழிவுகளும் அங்கேயே உள்ளது. அவற்றையும் அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை