மேலும் செய்திகள்
எரிவாயு தகன மேடை சீரமைப்பு பணி
24-Apr-2025
பொன்னேரி,பொன்னேரி நகராட்சியில், திருஆயர்பாடி கள்ளுக்கடைமேடு சுடுகாடு பகுதியில், கடந்த, 2023ல் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 1.44 கோடி ரூபாயில், 2,800 சதுரஅடி பரப்பில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டது.அங்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதிக்கு காத்திருந்தது. அனுமதி கிடைத்தபின், கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக எரிவாயு தகன மேடையை துவக்கி வைத்தார்.இருப்பினும் மக்களின் பயனுக்கு வராமல் கடந்த எட்டு மாதங்களாக முடங்கியே கிடந்தது. இது குறித்து நம் நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியானது.அதன் எதிரொலியாக, தற்போது எரிவாயு தகன மேடை பயனுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.சென்னையை சேர்ந்த ஒரு சமூக நல அறக்கட்டளை வாயிலாக, செயல்படுத்தப்படுகிறது. பிணங்களை எரியூட்ட கட்டணமாக 3,650 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
24-Apr-2025