தினமலர் செய்தி எதிரொலி பள்ளி சுவரில் வளர்ந்திருந்த செடிகள் அகற்றம்
காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில் உள்ள தர்கா முஸ்லிம் மாநகராட்சி பள்ளி சுவரில் அரசமர செடிகள் வளர்ந்து இருந்தன. இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, அப்பகுதி மாநகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர் ஜோதிலட்சுமி சார்பில், பள்ளி சுவரில் வளர்ந்திருந்த செடிகள் அகற்றப்பட்டன.