உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தி எதிரொலி கொப்பூரில் கிளை நுாலகம் சீரமைப்பு

தினமலர் செய்தி எதிரொலி கொப்பூரில் கிளை நுாலகம் சீரமைப்பு

கொப்பூர்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது கொப்பூர் ஊராட்சி.இங்கு அரசு பள்ளி அருகே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கிளை நுாலகத்தை பகுதிவாசிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் பயன்படுத்தி வந்தனர்.இந்த நுாலகம் போதிய பராமரிப்பு இல்லாதாதல் கட்டடம் மிகவும் சேமடைந்துள்ளது. மேலும் தற்போது அப்பகுதியைச் சேர்ந்த தனி நபர் ஒருவர் வீடு கட்ட தேவையான கட்டட பொருட்கள் மற்றும் சிமென்ட் போன்ற பொருட்களை வைக்கும் கிடங்காக செயல்பட்டு வருவதோடு மது அருந்தும் கூடாரமாகவும் மாறி விட்டது. இதேபோல் ஒருங்கிணைந்த மகளிர் சுயஉதவிக்குழு கட்டடமும் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிவிட்டதாக நமது நாளிதழில் படத்துடன செய்தி வெளியானது.இதையடுத்து நமது நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியால் கடம்பத்துார் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவின் பேரில் கிளை நுாலகத்தில் வைக்கப்பட்டிருந்த கட்டட பொருட்கள் அகற்றப்பட்டு சீரமைக்கப்பட்டது. இதேபோல் மகளிர் சுயஉதவிக்குழு கட்டடட பகுதியில் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை