மேலும் செய்திகள்
ரூ.12 கோடியில் கட்டியும் கைகொடுக்காத வடிகால்வாய்
20-May-2025
வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, ஒரகடம் நோக்கி செல்லும் நெடுஞ்சாலையோர பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.இந்த மழைநீர் வடிகால்வாய் மீது, நடந்து செல்ல வசதியாக நடைபாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், பள்ளி உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த நடைபாதையை பயன்படுத்தி பலர் செல்கின்றனர்.இச்சாலையோர நடைபாதையில், அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளி அருகே, அடுத்தடுத்து இரண்டு இடங்களில், கான்கிரிட் தளம் உடைந்து ஓட்டைகள் ஏற்பட்டு இருந்தன. இதனால், இந்த வழியாக நடந்து செல்வோர், மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சப்பட்டு வந்தனர்.இதுகுறித்த செய்தி, நம் நாளிதழில் வெளியானதையடுத்து, பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையால், அப்பகுதி நடைபாதை மீதான ஓட்டைகள் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு மூடி அமைக்கப்பட்டுள்ளது.
20-May-2025