உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தி: மயானத்தில் வசதி

தினமலர் செய்தி: மயானத்தில் வசதி

திருநகர்: தினமலர் செய்தி எதிரொலியாக திருப்பரங்குன்றம் ஒன்றிய விளாச்சேரி பொது மயானத்தில் ஆபத்தான நிலையில் இருந்த கட்டடம் அகற்றப்பட்டு புதிதாக கட்டப்படுகிறது. அங்குள்ள பொது மயானத்திலுள்ள கட்டடம் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அதில் இறந்தவர்களுக்கான இறுதிச் சடங்கின் போது, உறவினர்கள் அமர்ந்து மொட்டை போடுகின்றனர். இந்நிலையில் அக்கட்டடம் முழுவதும் சேதமடைந்து எப்பொழுது விழுமோ என்ற ஆபத்தான நிலையில் உள்ளது. அருகிலுள்ள கட்டடம் 22 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அக்கட்டடத்தில் இறந்தோரின் உறவினர்கள் அமர்ந்து பணிகளை பார்வையிடுவர். சடங்குகளும் நடைபெறும். அந்த கட்டடத்தின் மேல் பகுதியில் இருந்த கான்கிரீட் முழுமையாக விழுந்து கம்பிகள் மட்டும் தொங்கி கொண்டு இருக்கின்றன. ஒரு சில இடங்களில் தொங்கிக் கொண்டிருக்கும் கான்கிரீட் எப்பொழுது விழுமோ என்ற பயத்தில் மக்கள் இருந்தனர். அந்த 2 கட்டடங்களையும் முழுமையாக அகற்றிவிட்டு புதிய கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து மயானத்தின் வெளியில் இருந்த கட்டடம் முழுமையாக அகற்றப்பட்டு அங்கு புதிய கட்டடம் கட்டும் பணி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ