உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி /  தினமலர் செய்தியால் மீண்டும் நெல் கொள்முதல்: தண்ணீர் திறப்பு, முட்கள் அகற்றமும் நடந்தது

 தினமலர் செய்தியால் மீண்டும் நெல் கொள்முதல்: தண்ணீர் திறப்பு, முட்கள் அகற்றமும் நடந்தது

சோழவந்தான்: சோழவந்தான் அருகே பாலகிருஷ்ணாபுரம், இரும்பாடி மையங்களில் நிறுத்தியிருந்த நெல் கொள்முதல் பணிகள் தினமலர் செய்தியால் மீண்டும் தொடங்கியது. இங்கு கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நிர்ணயிக்கப்பட்ட அளவு முடிந்ததால் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டது. இதனால் பத்தாயிரத்துக்கும் அதிகமான நெல் மூடைகள் மையங்களில் தேங்கின. மழையால் இதனை பாதுகாக்க விவசாயிகள் சிரமப்பட்டனர். விவசாயிகள் தேங்கிய நெல்லை கொள்முதல் செய்யக்கோரி பலமுறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லாமல் இருந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மீண்டும் நெல் கொள்முதலை தொடங்கியது. அலங்காநல்லுார் ஒத்தவீடு பெரியாறு பாசன கால்வாய் கரை ரோட்டோரத்தில் 'டிரான்ஸ்பார்மரை' கருவேலமுட்கள் சூழ்ந்து இருந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. உடனே 'டிரான்ஸ்பார்மரை' சுற்றி இருந்த கருவேல மரங்களை மின்வாரிய நிர்வாகம் அகற்றியது. மேலுார் கம்பர்மலைபட்டியில் நேரடி பாசனத்திற்கு தண்ணீர் திறக்காததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் கருக ஆரம்பித்தது. அதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஜெயராமன் ஏற்பாட்டின் பேரில் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். உடனுக்குடன் பணிகள் நடந்ததால் விவசாயிகள் தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ