உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி /  தினமலர் செய்தி; ரோடு சீரமைப்பு

 தினமலர் செய்தி; ரோடு சீரமைப்பு

சோழவந்தான்: சோழவந்தான் அருகே சில மாதங்களுக்கு முன் தச்சம்பத்து - ரிஷபம் ரோடு அமைக்கப்பட்டது. ரோடு அமைத்த ஓரிரு மாதங்களிலேயே பல இடங்களில் பெயர்ந்து சேதமடைந்தது. இதனால் வாகனங்கள் செல்ல மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இரவில் டூவீலரில் செல்வோர் மேடு, பள்ளங்களில் விழுந்து காயமடைந்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியாகியிருந்தது. இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த இடங்களில் 'பேட்ச் ஒர்க்' செய்து சீரமைத்தனர். அப்பகுதி மக்கள் தினமலர் நாளிதழ் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ