உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / இ- -- சேவை மையத்தில் கூடுதல் இருக்கைகள்

இ- -- சேவை மையத்தில் கூடுதல் இருக்கைகள்

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி, ஜி.எஸ்.டி., சாலையில், இயங்கி வரும் நகராட்சி அலுவலகத்தில், அரசு இ- சேவை மையம் இயங்கி வருகிறது.ஆதார் அட்டை, ரேசன் கார்டு உள்ளிட்ட அரசு ஆவணம் தொடர்பான சேவைகளுக்கு விண்ணப்பிக்க, தினமும் 100 பேர் இங்கு வருகின்றனர்.இந்த இ- சேவை மையத்திற்கு வரும் நபர்கள், காத்திருக்க, அலுவலகம் வெளியே, மரத்தடியில், அமைக்கப்பட்டிருந்த 10 இருக்கைகளில், நான்கு இருக்கைகள் சேதமடைந்த நிலையில் இருந்தன.ஒரே நேரத்தில் 10க்கும் மேற்பட்ட நபர்கள் வருகை தரும்போது, அனைவரும் அமர்வதற்கு போதுமான எண்ணிக்கையில் இருக்கைகள் இல்லை.இதனால், வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் நீண்ட நேரம் கால்வலிக்க நிற்கும் சூழல் நிலவியது. இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, அங்கு, தகர கூரை புதிதாக அமைக்கப்பட்டு, அதன் உள்ளே 12 நபர்கள் அமர்வதற்கான இருக்கைகள் பொருத்தப்பட்டன.செய்தி வெளியிட்ட நம் நாளிதழுக்கும், உடனடி நவடிக்கை எடுத்த நகராட்சி நிர்வாகத்திற்கும், பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி