உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / முருக்கேரியில் மின் கம்பம் மாற்றியமைப்பு

முருக்கேரியில் மின் கம்பம் மாற்றியமைப்பு

உத்திரமேரூர்:நம் 'நாளிதழில்' வெளியான செய்தியை அடுத்து, முருக்கேரியில் மின் கம்பம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. உத்திரமேரூர் ஒன்றியம், முருக்கேரி கிராமத்தில் இருந்து, அழிசூர் செல்லும் சாலை 2 கி.மீ., துாரம் உள்ளது. இச்சாலையோரத்தில், சுற்றியுள்ள விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்க, மின்வாரியத் துறையின் சார்பில் கம்பங்கள் நடப்பட்டு, மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த சாலையின் குறுக்கே செல்லும் மின் கம்பிகள் தாழ்வாக இருந்தன. இதனால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் மின் கம்பிகளில் உரசி மின் விபத்து ஏற்படும் நிலை இருந்தது. இதை தவிர்க்க, அப்பகுதி மக்கள் மின் கம்பிகளை மரக்கம்பால் முட்டுக் கொடுத்து உயர்த்தி நிறுத்தி இருந்தனர். காற்று அதிகமாக வீசும் நேரங்களில் கம்பு விலகி விபத்து ஏற்படவும் வாய்ப்பு இருந்தது. இது குறித்தான செய்தி, நம் நாளிதழில் வெளியானதையடுத்து, மரக்கம்பு அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக மின் கம்பம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !