செய்தி எதிரொலி சேதமான மின் ஒயர்கள் மாற்றம்
கூடுவாஞ்சேரி:பெருமாட்டுநல்லுார் ஊராட்சி, பாண்டூர் சுற்றுவட்டார பகுதிகளில், சில நாட்களாக, குறைந்த அழுத்தம் கொண்ட மின் வினியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது.இதனால், அப்பகுதியில் வசிப்போர், இரவு நேரத்தில் மின் விசிறியை பயன்படுத்த முடியாமல், துாக்கம் இன்றி சிரமம் அடைந்து வந்தனர். அதேபோல், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை பயன்படுத்த முடியாமல் பெண்கள் சிரமம் அடைந்தனர்.இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் விளைவாக, மறைமலை நகர் செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் உத்தரவின்படி, கூடுவாஞ்சேரி உதவி பொறியாளர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட மின் பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு, தங்கப்பாபுரம் பகுதியில் சேதமான மின் ஒயர்களை மாற்றம் செய்து, அப்பகுதியில் சீரான மின் வினியோகத்திற்கு வழி வகை செய்தனர்.