உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / புது உயரழுத்த மின் கோபுரம் அமைப்பு

புது உயரழுத்த மின் கோபுரம் அமைப்பு

கொடுங்கையூர்:நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, சாய்ந்த உயர் அழுத்த மின் கோபுரம் மாற்றி அமைக்கப்பட்டது. தண்டையார்பேட்டையில் இருந்து 230 கிலோ வாட் உயரழுத்த மின்சாரத்தை, கோயம்பேடிற்கு கடத்தும் வகையில் மின் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை தாங்கி பிடிக்க குறிப்பிட்ட இடைவெளியில் பெரிய கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், கொடுங்கையூர் குப்பை கிடங்கு வழியாக செல்லும் மின் கம்பிகளை, 50க்கும் மேற்பட்ட கோபுரங்கள் தாங்கி நிற்கின்றன. கடந்த 11ம் தேதி, 100 அடி உயரமுள்ள ஒரு உயரழுத்த மின் கோபுரம் சாய்ந்தது. இதனால், அருகில் வசிக்கும் மக்கள் பீதியடைந்தனர். இது குறித்து, 12ம் தேதி, நம் நாளிதழில் செய்தி வெளியானது. மின் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, மின் இணைப்பை துண்டித்தனர். சாய்ந்த மின் கம்பத்தை சீரமைக்க முடியாது என்பதால், அதன் அருகில் புதிதாக மின்கம்பம் அமைக்கும் பணியை, மின்வாரிய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை