உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / செய்தி எதிரொலி மேல்வசலை சாலையில் வேகத்தடை அமைப்பு

செய்தி எதிரொலி மேல்வசலை சாலையில் வேகத்தடை அமைப்பு

சித்தாமூர்:நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக வேட்டூர் சாலையில் விபத்து ஏற்பட்டு வந்த இரண்டு இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது.சித்தாமூர் அடுத்த மேல்வசலை கிராமத்தில் வேட்டூர் செல்லும் 8 கி.மீ., மாநில நெடுஞ்சாலை உள்ளது.இந்த சாலையை மேல்வசலை, கீழ்வசலை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.தினசரி பைக், கார், வேன், பேருந்து, லாரி என, நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையில் கடந்து செல்கின்றன.மேல்வசலை கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில் அபாயகரமான சாலை வளைவு உள்ளது.சாலை வளைவுப் பகுதியில் வேகத்தடை இல்லாததால், வேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வரும் வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றன. மேலும் கட்டுப்பாட்டை இழந்து சாலையேரத்தில் உள்ள மரத்தில் மோதி விபத்து ஏற்படுகின்றன.இதேபோல நீர்பெயர் கிராமத்தில் உள்ள குளம் அருகே உள்ள அபாயகரமான சாலை வளைவில் வேகத்தடை இல்லாததால், வேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வரும் வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றனர். இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக நீர்பெயர் மற்றும் மேல்வசலை உள்ளிட்ட இரண்டு இடங்களில் நேற்று மாநில நெடுஞ்சாலைத்துறையினர் வேகத்தடை அமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ