உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / கூவர்கூட்டத்தில் பகுதி நேர ரேஷன்கடை திறப்பு; தினமலர் செய்தி எதிரொலி

கூவர்கூட்டத்தில் பகுதி நேர ரேஷன்கடை திறப்பு; தினமலர் செய்தி எதிரொலி

முதுகுளத்துார்; தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் அருகேயுள்ள கூவர்கூட்டம் கிராமத்தில் பகுதி நேர ரேஷன்கடை திறக்கப்பட்டுள்ளது. கூவர்கூட்டம் கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக் கின்றனர். ரேஷன்கடை வசதி இல்லாததால் ரேஷன் கார்டுதாரர்கள் 3 கி.மீ., பொதிகுளம் கிராமத்திற்கு சென்று அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் ஜூலை 24ம் தேதி அத்தியாவசிய பொருட்கள் வாங்கிவிட்டு டிராக்டரில் ஊர் திரும்பி வரும் போது பொதிகுளம் அருகே டிராக்டர் கவிழ்ந்து மூன்று பேர் இறந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கூவர்கூட்டம் கிராமத்திற்கு பகுதி நேர ரேஷன் கடை வேண்டி தினமலர் நாளிதழில் பலமுறை செய்தி வெளியாகியுள்ளது. இதன் காரணமாக கூவர்கூட்டம் கிராமத்தில் பகுதி நேர ரேஷன்கடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை