பயணியர் நிழற்குடை சீரமைப்பு
கடம்பத்துார் ஒன்றியம் வயலுார் ஊராட்சியில் பராமரிப்பில்லாத பயணியர் நிழற்குடையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. மேலும், மது அருந்தும் கூடாரமாகவும் மாறியிருந்தது. இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, ஊராட்சி நிர்வாகம் சார்பில் பயணியர் நிழற்குடை சீரமைக்கப்பட்டது. இடம்: அகரம், வயலுார்.