உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / சேதமான நத்தம் சாலை சீரமைப்பு

சேதமான நத்தம் சாலை சீரமைப்பு

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே தம்புரெட்டிபாளையம் முதல் நத்தம் வரையிலான சாலை நெடுஞ்சாலை துறையினர் பராமரிப்பில் உள்ள சாலையாகும். உயரமாக அமைக்கப்பட்ட அந்த சாலையில், எதிர் எதிரே இரு கார்கள் சென்றால் சாலையை விட்டு இறங்க முடியாத படி இரு புறமும் பள்ளமாக இருந்தது. இதனால் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள் பயணிப்பதாக நம் நாளிதழில் செய்தி வெளியானது. தற்போது, அந்த சாலையில், இரு புறமும் மண் நிரப்பி, வாகனங்கள் சாலையை விட்டு இறங்கி செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ