புவனகிரி பேரூராட்சியில் சாலை அமைக்கும் பணி; தினமலர் செய்தி எதிராலி
புவனகிரி; புவனகிரி பேரூராட்சி பகுதியில், தினமலர் செய்தி எதிரொலியால் தார் சாலை அமைக்கும் பணிகள் துவங்கியது. புவனகிரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் சாலைகள் சேதமடைந்து போக்குவரத்திற்கு இடையூராக இருந்தது. இதனால் விபத்துகளும் அதிகரித்து வந்தது. இது குறித்து சமீபத்தில் தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் தொடர்ச்சியாக புவனகிரி பேரூராட்சிக்குப்பட்ட யாதவர் தெரு, பாளையக்காரர் தெரு, கம்மாளர் தெரு, ஈஸ்வரன் கோவில் தெரு, புதுப்பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பேரூராட்சி பொறியாளர் அன்புகுமார் ஆய்வு செய்தார். இ தன் அடிப்படையில் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 64 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பேரூராட்சி பகுதிகளில் பணிகள் துவங்கியது. புதியதாக சாலை அமைக்கும் பணியை செயல் அலுவலர் மயில்வாகனன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் கவுன்சிலர் சரஸ்வதிமணி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.