உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி /  சாலையோர கடைகள் அகற்றம்

 சாலையோர கடைகள் அகற்றம்

புதுச்சேரி: புதுச்சேரியின் அடையாளமே அதன் அகலமான வீதிகள் தான். ஆனால், சமீபகாலமாக மறைமலை அடிகள் சாலையில் நடை பாதைகளை ஆக்கிரமித்து ஏராளமான பிரியாணி கடைகள், தள்ளுவண்டி கடைகள் முளைத்தன. குறிப்பாக இரவு நேரங்களில் இந்தக் கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். குப்பைகள் சாலையிலேயே கொட்டப்பட்டதால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டது. இதுகுறித்து தினமலர்' நாளிதழில்செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம்,மறைமலை அடிகள் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த அனைத்து ஆக்கிரமிப்பு கடைகளையும் அகற்றினர். அகற்றப்பட்ட பகுதிகளில் போதிய மின் விளக்கு வசதிகளை ஏற்படுத்தி, அந்த இடத்தை வெளிச்சமாக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமிப்பாளர்கள் வராத வகையில், நகராட்சி மற்றும் போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபடவேண்டும். சாலையை மக்கள் தடையின்றி பயன்படுத்த ஏதுவாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை