தினமலர் செய்தியால் தீர்வு
கொட்டாம்பட்டி: கச்சிராயன்பட்டி நான்கு வழிச்சாலையில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள கல்லம்பட்டி வரை 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட தார் ரோடு பெயர்ந்து ஜல்லிக்கற்களாக மாறின. அதனால் பஸ், ஆம்புலன்ஸ் வர மறுத்ததால் மக்கள் நடந்து செல்ல சிரமப்பட்டனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக புதிய தார் ரோடு மற்றும் பாலம் அமைக்கப்பட்டது.