உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / செய்தி எதிரொலி பழுதடைந்த கட்டடம் அகற்றம் பள்ளி மாணவர்கள் நிம்மதி

செய்தி எதிரொலி பழுதடைந்த கட்டடம் அகற்றம் பள்ளி மாணவர்கள் நிம்மதி

ஊத்துக்கோட்டை:பூண்டி ஒன்றியம், பெரிஞ்சேரி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 14 மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.இங்கு தலைமையாசிரியர் உள்ளிட்ட இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வகுப்பறை கட்டடத்தில் பயின்று வந்தனர்.இந்த கட்டடம் சேதமடைந்ததால், மாணவர்கள் புதிய கட்டடத்தல் பயின்று வருகின்றனர். இந்நிலையில், பழைய கட்டடத்தின் சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுகிறது. மழைக் காலங்களில் நீர் கசிந்து வருவதால், கட்டடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.இதனால், கட்டடம் எப்போது விழுமோ என்ற அபாய நிலை இருந்து வந்தது. இதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோர் அச்சத்தில் இருந்து வந்தனர். இதுகுறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, பூண்டி ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, பழுதடைந்த கட்டடத்தை இடிக்க உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து பழுதடைந்த கட்டடம் இடிக்கப்பட்டது. இதனால் ஆசிரியர்கள், பெற்றோர் நிம்மதி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை