உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / திருக்கழுக்குன்றத்தில் மரம் அகற்றம்

திருக்கழுக்குன்றத்தில் மரம் அகற்றம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், நம் நாளிதழ் செய்தி எதிரொலியால், மக்களை அச்சுறுத்திய அபாய மரம் அகற்றப்பட்டது. திருக்கழுக்குன்றத்தில், சதுரங்கப்பட்டினம் சாலை சந்தை பகுதியில் மளிகை, காய்கறிகள், இறைச்சி உள்ளிட்ட கடைகள் நிறைந்துள்ளன. அங்கு பொருட்கள் வாங்க, பொதுமக்கள் செல்கின்றனர். கல்பாக்கம் பகுதி வாகனங்கள், அரசுப் பேருந்துகள் உள்ளிட்டவை இவ்வழியே செல்கின்றன. இங்கு சாலையோரம் வளர்ந்துள்ள காட்டு வாகை மரம் பட்டுப்போன நிலையில், சூறாவளி காற்றில் முறிந்து விழும் அபாயத்தில் இருந்தது. சாலையில் செல்வோர், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து சென்றனர். இந்த மரத்தை அகற்ற வேண்டுமென, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், நெடுஞ்சாலைத் துறையினர் இப்பகுதியில் வாகன போக்குவரத்தை நிறுத்தி, 'கிரேன்' இயந்திரம் மூலமாக, பட்டுப்போன மரத்தின் நீளமான கிளைகளை அகற்றினர். பின், மரத்தின் அடிப்பாகம் வரை படிப்படியாக வெட்டி அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை