மேலும் செய்திகள்
ஒரு ஏக்கர் தொழில் மனை ரூ.56 கோடிக்கு விற்பனை
27-Mar-2025
சிவகங்கை: சிவகங்கை அருகே அரசனுாரில் 775 ஏக்கரில் சிப்காட் தொழில் பூங்காவிற்கான பணிகளை விரைந்து துவக்க வேண்டும் என சிவகங்கை வந்தமுதல்வர் ஸ்டாலின் பார்வை கட்டுரை தினமலரில் வெளியானது. இதன் எதிரொலியாக 'சிப்காட்' தொழில் பூங்கா துவக்குவதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது. சிவகங்கை அருகே அரசனுார், இலுப்பக்குடி, கிளாதரி ஆகிய மூன்று கிராமங்களில் 1451 ஏக்கர்நிலம் சிப்காட் தொழிற் பூங்காவிற்கு தேர்வு செய்தனர். தொடர்ந்து அரசு இத்திட்டத்தை கிடப்பில் போட்டது. விரைவில் இங்கு சிப்காட் தொழிற்பூங்கா துவக்கி சென்னை, கோயம்புத்துார் ஆகிய நகரங்களுக்கு இணையாக தொழிற் பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் நேரடி, மறைமுகமாக வேலைவாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே 1451 ஏக்கர் நிலம் எடுக்க திட்டமிட்ட நிலையில், தற்போது இலுப்பைக்குடி 605.39, கிளாதிரி 62, அரசனுார் 108.40 என மொத்தமாக 775.79 ஏக்கர் மட்டுமே கைப்பற்றியுள்ளனர். இங்கு தொழிற்பூங்கா துவக்குவதற்கான பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வந்தது. இது குறித்து ஜன.,22ல் சிவகங்கை வந்த முதல்வர் ஸ்டாலின் கவன கட்டுரை தினமலரில் வெளியானது. இதன் எதிரொலியாக தற்போது ரோடு, குடிநீர், சிப்காட் தொழிற் பூங்கா நுழைவு வாயில் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.342 கோடி ஒதுக்கப்பட்டு, அடிப்படை பூர்வாங்க பணிகள் துவங்கியுள்ளன. முதற்கட்டமாக அரசனுார்சமத்துவபுரம் அருகே தொழிற்பூங்காவிற்கான நுழைவு வாயில் கட்டுமான பணி நடைபெற்றுள்ளது. அதனை தொடர்ந்து அரசனுார் சமத்துவபுரம் அருகில் இருந்து, சிப்காட் வளாகம் முழுவதும் இருவழிச்சாலை அமைக்கும் பணி துவக்கப்பட உள்ளது.இந்த ரோடு வசதிகள் ஏற்படுத்தி, ஜவுளி தொழில் பூங்கா, ஆட்டோ மொபைல் தொழிற்சாலை அமைந்தால், நேரடி, மறைமுகமாக 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
27-Mar-2025