உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / மாத்திரைகள் வைத்திருந்த இளைஞர் கைது

மாத்திரைகள் வைத்திருந்த இளைஞர் கைது

திருத்தணி:திருத்தணி நகராட்சி, 9வது வார்டு, பாலாஜி நகர் பகுதியில், அம்மன் கோவில் அருகே, சில இளைஞர்கள் கஞ்சா மற்றும் மதுபோதையில் அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறு செய்து வந்தனர்.இது குறித்து செய்தி, நம் நாளிதழில் நேற்று வெளியானது. இதையடுத்து, திருத்தணி போலீசார் பாலாஜி நகரில் சோதனை நடத்தினர்.அப்போது அம்மன் கோவில் அருகிலிருந்த ஒரு இளைஞரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து சோதனை செய்ததில், அவனிடம், 38 போதை மாத்திரைகள் இருந்ததை பறிமுதல் செய்து கைது செய்தனர்.விசாரணையில், திருத்தணி பகுதியைச் சேர்ந்த லோகேஷ், 24 என்பது தெரிய வந்தது.வெளிமாநிலத்தில் இருந்து போதை மாத்திரைகள் கடத்தி வந்து அப்பகுதி இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை