உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன்:அ.தி.மு.க., ஆட்சியின்போது, 2012ல் டெங்கு பாதிப்பால், 66 பேர் உயிரிழந்தனர்; 2017ல், 65 பேர் இறந்தனர். இந்தாண்டு டெங்கு உயிரிழப்பு, எட்டு என்ற அளவில் தான் உள்ளது. இதை தெரிந்து கொள்ளாமல், பழனிசாமி அறிக்கை விடுவது ஏற்புடையதல்ல. இந்த துறை குறித்து பழனிசாமியுடன் விவாதம்செய்ய தயாராக இருக்கிறேன். நேரம் கொடுங்கள், இடம் சொல்லுங்கள், நான் ஒருவனேவருகிறேன்; உங்கள் முன்னாள்அமைச்சரையும் அழைத்து வாருங்கள். விவாதம் செய்ய தயாராக இருக்கிறேன்.டவுட் தனபாலு: நீங்களோ சட்டம் படித்தவர்... அ.தி.மு.க.,வில் இருக்கும்சுகாதார துறை முன்னாள்அமைச்சர் விஜயபாஸ்கரோ, மருத்துவம் படித்தவர்... உங்க துறையை பற்றி ஆதியோட அந்தமாஎல்லாம் தெரிஞ்சு வச்சிருப்பார்...அவர் டெக்னிக்கலா கேள்விகள் கேட்டா, உங்களால பதில் தர முடியுமா என்பது, 'டவுட்'தான்!தமிழக பா.ஜ., தலைமை அறிக்கை: பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள்நல திட்டங்களைஅப்படியே, 'காப்பி' அடிப்பது,முதல்வர் ஸ்டாலினுக்கு கைவந்தகலை. தேசிய கல்வி கொள்கையின்ஒரு பகுதியாக அறிமுகம் செய்யப்பட்ட காலை உணவு திட்டத்தில் துவங்கி, ஜல்ஜீவன், ஆவாஸ் யோஜனா போன்ற பல திட்டங்களை, தமிழகத்தில் அறிமுகப்படுத்திய தி.மு.க., அரசு, மாற்றான்பிள்ளைக்கு தன் பெயரை சூட்டி குதுாகலிக்கிறது. மற்றபடி,பிரதமரின் திட்டங்களை தவறாமல்பின்தொடரும் தி.மு.க., அரசின் அளப்பரிய அன்பை கண்டு பா.ஜ., மகிழ்கிறது.டவுட் தனபாலு: 'உங்களுடன்கூட்டணி இல்லை'ன்னு அ.தி.மு.க.,வின் பழனிசாமி அறிவிச்சிட்டாரு...விஜய் வேற புதிய கட்சியை துவக்கி, உங்களுக்கு எதிரா கம்புசுத்துறாரு... அதனால, வாஜ்பாய் கால தி.மு.க., கூட்டணியை புதுப்பிக்கலாம்னு, திட்டுற மாதிரிதி.மு.க.,வை பாராட்டுறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!வி.சி., கட்சி நிர்வாகிகள்: கட்சிக்கு புதியவரான ஆதவ்அர்ஜுனாவுக்கு, திருமாவளவன்அதீத முக்கியத்துவம் தருகிறார்.கட்சியில் இணைந்த சில நாட்களிலேயே துணை பொதுச் செயலர் பொறுப்பு வழங்கினார்.அவர் கொடுக்கும் ஆலோசனையைஏற்று செயல்படுகிறார். இது கட்சியிலும், கூட்டணி உறவிலும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே, ஆதவ் அர்ஜுனா ஆலோசனைகளை திருமா ஏற்கக்கூடாது.டவுட் தனபாலு: வி.சி., கட்சியில்காலம் காலமா இருக்கிற தொண்டர்களும், நிர்வாகிகளும்போஸ்டர் ஒட்டவும், பேனர்கள் கட்டவும் மட்டும்தானே பயன்படுறாங்க... ஆதவ் அர்ஜுனா, கட்சிக்கு, 'காமதேனு'வா இருக்காரே...அதனால, அவரை திருமாவளவன்தள்ளி வைப்பாரா என்பது, 'டவுட்'தான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை