உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக முதல்வர் ஸ்டாலின்: நம் கூட்டணி பயணத்தில், 2019 முதல் நாம் இணை பிரியாமல் இருக்கிறோம். ஏனெனில் நம் இலக்கு என்ன? நாம் யாரை, எதற்காக எதிர்க்க வேண்டும் என்ற தீர்க்கமான முடிவோடு இயங்குகிறோம். கூட்டாட்சி என்ற சொல்லே, இன்று மத்திய ஆட்சியாளர்களுக்கு அலர்ஜியாக உள்ளது. இந்திய அளவில் கூட்டாட்சிக்காக நாம் தொடர்ந்து போராடுகிறோம். ஆனால், இதற்கு எதிராக மத்திய அரசு உள்ளது. டவுட் தனபாலு: மத்தியில் கூட்டாட்சிக்கு குரல் கொடுக்குறீங்களே... மாநிலத்தில், உங்க கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு குடுத்து, மாநில அளவில் கூட்டாட்சிக்கு முன்னுதாரணமாக நீங்க இருக்கலாமே... அதை செய்துட்டு, மத்திய அரசிடம் கூட்டாட்சி குறித்து குரல் எழுப்பினால், 'டவுட்'டே இல்லாம தங்களை பாராட்டலாம்!ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன்: 'தி.மு.க.,வில் இருக்கும் ஹிந்துக்கள் பொட்டு வைக்கக் கூடாது; கைகளில் கயிறு கட்டக் கூடாது' என்று அந்த கட்சியின் நீலகிரி தொகுதி எம்.பி., ராஜா பேசியுள்ளார். 'பொட்டு வைப்பவர்கள், கயிறு கட்டுவோர் ஓட்டுகள் எனக்கோ, தி.மு.க.,வுக்கோ தேவையில்லை' என, அவர் வெளிப்படையாக அறிவிப்பாரா? டவுட் தனபாலு: ராஜா ஒன்றும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டாம்... அவருக்கு இதுவரை ஓட்டு போட்டு வந்த ஹிந்துக்கள், 'இனி இவருக்கு ஓட்டளிக்க மாட்டோம்' என்ற நிலைப்பாட்டை எடுத்தாலே, அடுத்த தேர்தலில் ராஜா காணாம போயிடுவார் என்பதில், 'டவுட்டே இல்லை!விஸ்வ ஹிந்து பரிஷத் துணை பொதுச்செயலர் சந்திரசேகரன்: தி.மு.க., - எம்.பி., ராஜா, ஹிந்து மதத்தை தொடர்ந்து இழிவுபடுத்திப் பேசுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். அவருடைய பேச்சு, தி.மு.க.,வில் உள்ள ஹிந்துக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அனைத்து மதத்தவருக்கும் பொதுவானவராக செயல்பட வேண்டிய முதல்வர், இதை கண்டிக்காதது ஏன்? அப்படியென்றால், ராஜா கருத்தை முதல்வர் ஆதரிக்கிறாரா? டவுட் தனபாலு: முதல்வரின் தந்தை கருணாநிதி, நெற்றியில் குங்குமத்துடன் வந்த தன் கட்சி எம்.பி.,யிடம், 'நெற்றியில் ரத்தம் வழிகிறதா' எனக் கேட்டவர்... இன்றைய முதல்வர் அப்படி கேட்பவர் இல்லை என்றாலும், ராஜாவை கண்டிக்காமல் விட்டால், அவரது கருத்தை முதல்வரும் ஆதரிக்கிறாரோ என்ற, 'டவுட்' வரத்தான் செய்யும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Anantharaman Srinivasan
ஏப் 06, 2025 18:27

கருணாநிதி, நெற்றியில் குங்குமத்துடன் வந்த தன் கட்சி எம்.பி.,யிடம், நெற்றியில் ரத்தம் வழிகிறதா எனக் கேட்டவர்... அதே கருணாநிதிக்கு தாடி வளர்த்த மதத்தவரிடம் ஷேவ் செய்ய டைம் இல்லையா என ஏன் கேட்க முடியவில்லை..?


HoneyBee
ஏப் 06, 2025 18:13

சொரணை ரோஷம் மானம் இல்லாத இந்துக்கள் இருக்கும் வரை இவர்கள் இப்படி தான் பேசுவார்கள். அடிமை இந்துக்கள் தான் விழித்து கொள்ள வேண்டும்


gopal
ஏப் 06, 2025 11:39

தன் மானமுள்ள, நேர்மையான, ஒழுக்கமான எந்த ஹிந்துவும் ராசாவுக்கு அல்லது அவரை போன்றவருக்கு ஓட்டளிக்கவே மாட்டார்கள்.


D.Ambujavalli
ஏப் 06, 2025 10:05

முதல்வர் தானாக எதையும் கூற மாட்டார் His masters voice என்று வேறு ஒரு அமைச்சர்தான் கூறுவார். பழனிச்சாமிக்கு ஜெயக்குமார் போல


Dharmavaan
ஏப் 06, 2025 09:41

எ ராஜா ஹிந்து இல்லை ஹிந்து மதத்தை பழிப்பவன் ஹிந்து இல்லை அவன் தனி தொகுதியில் போட்டியிடுவதை கோர்ட் மூலம் தடுக்க வேண்டும்


Shekar
ஏப் 06, 2025 09:39

எங்க கூட்டணி மத்தியில ஆட்சியை பிடித்தால் கூட்டணி தத்துவப்படி, எங்களுக்கு 4 மந்திரிகள் தருவாங்க தரணும். அதே மாதிரி மாநிலத்தில் எங்கள் ஆட்சியில் நாங்கள் மந்திரிப்பதவிகளுக்கு பதில் பெட்டி கொடுத்திருவோம், அவங்களும் திருப்தியா விசுவாசத்தோடு சேவகம் செய்வார்கள்


Velan Iyengaar, Sydney
ஏப் 06, 2025 08:12

திராணி இருக்கிறதா, தில் இருக்கா என கூவும் இந்த இரும்புக் கரம் தேர்தலில் தனியாக நின்று டெபாசிட் வாங்குமா ? சும்மா vettu உதார்


Rajan A
ஏப் 06, 2025 08:56

அது தெரிந்துதான் கூட்டணியை தக்க வைக்கும் அறிக்கைகள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை