தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ்: 'சமக்ர சிக்ஷா அபியான்' திட்டத்தில், மத்திய அரசிடம் இருந்து, தமிழகத்துக்கு கடந்த ஜூன் மாதத்தில் வரவேண்டிய, 573 கோடி ரூபாய் இன்னும் வரவில்லை. அது மட்டுமல்ல... கடந்தாண்டு வர வேண்டிய கடைசி தவணை தொகை, 249 கோடி ரூபாயையும் நிறுத்தி வைத்து விட்டனர்.டவுட் தனபாலு: மத்திய அரசு பங்கான, 12,000 கோடியை தராத மெட்ரோ ரயில் திட்டத்தை, 65,000 கோடி ரூபாய் செலவில் தமிழக அரசே ஏற்று நடத்துது... இந்த, 573 கோடி ரூபாயையும் அதே மாதிரி ஏற்று, 15,000 ஆசிரியர்களுக்கும் சம்பளம் குடுக்க விடாம, தமிழக அரசை தடுப்பது யார் என்ற, 'டவுட்' வருதே!பா.ஜ.,வை சேர்ந்த, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா:ஜார்க்கண்டில் சம்பாய் சோரன்முதல்வராக இருந்த போது, அவரை இரு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். முதல்வரையே ரகசியமாக கண்காணித்த நிகழ்வு, தற்போது தான் நடந்துள்ளது. இது குறித்து நாங்கள் புகார் அளிப்போம்.டவுட் தனபாலு: முதல்வர் பதவிக்கு உரியவர் வந்து கேட்டதும், எங்க ஊர் பன்னீர்செல்வம் மாதிரி, 'டக்'குன்னு துாக்கி கொடுத்துட்டு, சம்பாய்சோரன் கமுக்கமா இருக்கலையே... பதவி பறிபோன கடுப்புல, உங்க பக்கம் தாவிட்டாரே... அவர் மேல ஆரம்பத்துலயே, 'டவுட்' இருந்ததால தான், கண்காணிச்சிருக்காங்க!அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: 'சமக்ர சிக் ஷா அபியான்' திட்டத்தின் கீழ்,573 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விடுவிக்காததால், 15,000 ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை உள்ளது. 'ஒரே வார்த்தையில் அழைத்தோம். ராணுவ அமைச்சர் நேரில் வந்து, கருணாநிதி நாணயத்தை வெளியிட்டார்' என, தம்பட்டம் அடித்துக் கொள்ளும்முதல்வர், அதேபோல் ஒரே வார்த்தையில் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வராததும், 'நீட்' தேர்வை ஒழிக்காததும் ஏன்? டவுட் தனபாலு: மாபெரும் மக்கள் தலைவரான கருணாநிதிக்கு நாணயம் வெளியிடுறதையும், சாதாரண 15,000 ஆசிரியர்கள் வாழ்க்கை தரம் பாதிக்கப்படுறதையும் ஒப்பிட்டு பேசலாமா... நாணயம் வாயிலா, கருணாநிதி புகழ் தேசமெங்கும்பரவியிருக்கே... 15,000ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்காதது பத்தி, கும்மிடிப்பூண்டி தாண்டினா யாரும் கவலைப்பட மாட்டாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!