வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தெருவுக்கு நாலு டாஸ்மாக் இருக்குமாம், புற வாசல் வழியாக வரும் போதைக்கு மட்டும் வெகு கவனமாக கைது, அதுவும் நாலு பெட்டிக்கடை அளவில் நடத்துவார்களாம் போதை ஒழிப்பின் லட்சணம்
தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு: கல்வியில், இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பள்ளி கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. தமிழக அரசு, கல்விக்கு அதிக நிதியை ஒதுக்குகிறது. நடப்பாண்டு பட்ஜெட்டில், 44,000 கோடி ரூபாய் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது; இது, மொத்த பட்ஜெட்டில், 8 சதவீதம்.டவுட் தனபாலு: வருஷத்துக்கு கல்விக்கு, 44,000 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்தும், ஆளுங்கட்சி அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் ஏன் சேர்க்க மாட்டேங்கிறாங்க என்ற, 'டவுட்' வருதே... இதற்கு உங்களிடம் விளக்கம்இருக்குதா?தமிழக வணிகவரி துறை அமைச்சர் மூர்த்தி: அமெரிக்காசென்றுள்ள முதல்வர், தமிழகத்திற்கு திரும்பியவுடன், அமைச்சர் உதயநிதி துணை முதல்வராக பொறுப்பு ஏற்பார். செப்., 9ல் மதுரையில், 11,000 பேருக்கு பட்டாக்கள், சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கும் விழா, அமைச்சர் உதயநிதி தலைமை யில் நடக்கிறது. அவருக்கு கட்சியினர் பிரமாண்ட வரவேற்பு அளிக்க தயாராக வேண்டும்.டவுட் தனபாலு: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியை அதிகாரபூர்வமா மட்டும் தான் அறிவிக்கலை... சமீபத்துல, 150 புதிய பஸ்களை துவக்கி வச்சது,அடுத்து பட்டாக்கள் வழங்குறது என எல்லா துறை நிகழ்ச்சிகளையும் அவரை வச்சு தானே அமைச்சர்கள் நடத்துறாங்க... அந்த வகையில், அறிவிக்கப்படாத சூப்பர் முதல்வராகவே அவர் வலம் வர்றாரு என்பதில், 'டவுட்'டே இல்லை!பா.ம.க., தலைவர் அன்புமணி: போதையில்லா தமிழ்நாடு இயக்கத்துக்கு, ஊடகம், திறன் பயிற்சி, தரவு பகுப்பாய்வுக்கு, மூன்று வல்லுனர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிகளுக்கு இட ஒதுக்கீடு இல்லை; வயது வரம்பு இல்லை; எந்த அடிப்படையில், வல்லுனர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்ற எந்த விபரமும் இல்லை. மாதம், 1.50 லட்சம் ரூபாய் சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளது. டவுட் தனபாலு: எத்தனை லட்சம் சம்பளம் குடுத்து, எத்தனை வல்லுனர்களை நியமித்தாலும், 'டாஸ்மாக்'கை இழுத்து மூடாத வரைக்கும், 'போதையில்லா தமிழகம்' என்பதெல்லாம், போகாத ஊருக்கு வழி சொல்ற மாதிரி தான்என்பதில், 'டவுட்'டே இல்லை!
தெருவுக்கு நாலு டாஸ்மாக் இருக்குமாம், புற வாசல் வழியாக வரும் போதைக்கு மட்டும் வெகு கவனமாக கைது, அதுவும் நாலு பெட்டிக்கடை அளவில் நடத்துவார்களாம் போதை ஒழிப்பின் லட்சணம்