உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

பீஹாரில் செயல்படும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின்மூத்த தலைவர் லாலு பிரசாத்: 'ஜாதிவாரி கணக்கெடுப்பைநடத்த மாட்டோம்' என்று ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ.,சொல்வதற்கு என்ன அதிகாரம்இருக்கிறது. அவர்களின் காதை பிடித்து உட்கார வைத்து, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம். தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர்ஒற்றுமையை காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.டவுட் தனபாலு: அது சரி... 'கணக்கெடுப்பை நடத்துவோம்'னு சொல்றதுக்கு நீங்களும் கூட தான், ஆட்சி, அதிகாரத்தில் இல்லை... அதுபோகட்டும்... பீஹார்ல நீங்களும்,உங்க மனைவியும் பல வருஷங்களா முதல்வராக இருந்தப்பவே, ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒரு துரும்பை கூட கிள்ளி போடாததுஏன் என்ற, 'டவுட்' வருதே!பத்திரிகை செய்தி: நடிகர் விஜய் நடித்துள்ள, கோட் படம் இன்று வெளியாகிறது. இதற்கு பேனர்கள் வைப்பதற்கு, தமிழக வெற்றிக் கழகத்தினருக்குஅமைச்சர்களின் வாய்மொழி உத்தரவின் அடிப்படையில்,போலீசார் பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்படுவதாகபுகார் எழுந்துள்ளது.டவுட் தனபாலு: எப்பேர்ப்பட்ட மக்கள் செல்வாக்குடன் இருந்தஎம்.ஜி.ஆர்., படங்களுக்கே ஏகப்பட்ட இடையூறுகளைஏற்படுத்திய தி.மு.க.,வினர், முந்தா நாள் கட்சி துவங்கிய விஜய்யை விட்டு வைப்பாங்களா என்ன...? இதை விஜய் எப்படி சமாளிக்கிறார் என்பதில் தான், அவரது அரசியல் எதிர்காலம் அடங்கியிருக்கு என்பதில், 'டவுட்'டே இல்லை!அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: மேகதாதுவில் அணை கட்டுவதுகுறித்து, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் இங்கு வந்து பேசுகிறார்; அவருக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் கூற வேண்டும். அவர், துணை முதல்வர் பதவி கிடைக்காத கோபத்தில், சிங்கப்பூர்சென்று விட்டார். முதல்வர் இல்லை; மூத்த அமைச்சர் இல்லை; தமிழகத்தில் காபந்து அரசு நடக்கிறது. 'அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்' என, சொல்வதற்கு கூட ஆள் இல்லை.டவுட் தனபாலு: தமிழகத்தை பல வருஷங்களா ஆட்சி செய்த உங்க கட்சிக்கு பதில் தரும் உரிமை இல்லையா... பொறுப்பான எதிர்க்கட்சி என்றமுறையில், 'மேகதாதுவில் அணை கட்ட விட மாட்டோம்'னு கர்நாடகாவுக்கு பதில் தரவிடாம, உங்களை யார் தடுத்தது என்ற, 'டவுட்' எழுதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
செப் 05, 2024 16:43

நடப்பது 'கன்னுக்குட்டி' தர்பார்தானே யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும் 400 km speed இல் கார்கள் ஓடும் ரேஸ் நடத்திய 'சாதனையை' இன்னும் பத்து வருஷம் பேசிக்கொண்டிருப்பார்கள் அது போதாதா ? பயிர்கள் வாடினால் என்ன, விவசாயி செத்தால் என்ன ?


C janarthanan
செப் 06, 2024 07:27

உண்மை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை