உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் நடிகர் விஜய்: தமிழக வெற்றிக் கழகத்தை, ஓர் அரசியல் கட்சியாக, தற்போது தேர்தல் கமிஷன் பதிவு செய்துள்ளது. இதை பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி. திசைகளை வெல்வதற்கான முன்னறிவிப்பாக, இப்போது முதல் கதவு திறந்திருக்கிறது. தடைகளை தகர்த்தெறிந்து, கொடியை உயர்த்தி, தமிழக மக்களுக்கான தலையாய அரசியல் கட்சியாக, தமிழகத்தில் வலம் வருவோம். வெற்றிக்கொடி ஏந்தி மக்களை சந்திப்போம்; வாகை சூடுவோம்.டவுட் தனபாலு: தேர்தல் கமிஷனில் பதிவு செய்துட்டா மட்டும் வெற்றி பெற்றதா அர்த்தமில்லை... உங்க சினிமா பாணியில சொல்லணும் என்றால், இப்ப தான்,'டைட்டில்' தயாராகியிருக்கு... இனி, 'ஷூட்டிங், டப்பிங், ரீ ரிக்கார்டிங்' எல்லாம் முடிஞ்சு படம் வெளியாகி, மக்கள் மனதில்அழுத்தமா பதிவதில் தான், நிஜமான வெற்றி அடங்கியிருக்கு என்பதில், 'டவுட்'டே இல்லை!தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி:பள்ளிக்கல்வி துறை அமைச்சர்மகேஷின் ஊரான, அன்பில் பகுதியில் பள்ளி முதல்வரின் மகன் ஒருவர், மருத்துவராக உள்ளார். இவர், அங்குள்ள பள்ளி குழந்தைகளை பாலியல்துன்புறுத்தல் செய்ததாக, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதை மறைக்கவே, மகாவிஷ்ணு வழக்கை பரபரப்பாக்கி, அவரை பலிகடா ஆக்கி உள்ளனர்.டவுட் தனபாலு: முன்பெல்லாம்,'ஒரு பிரச்னையை மறைக்கணும்னா, அதன் தலையில்கல்லை போடு அல்லதுகமிஷனை போடு'ன்னு கிண்டலா சொல்வாங்க... இப்பல்லாம், பிரச்னைகளை மறைக்க புது பிரச்னையை உருவாக்குவது எப்படின்னு,அமைச்சருக்கு ஐடியா கொடுக்கவே தனி டீம் இருக்குதோ என்ற, 'டவுட்' தான் எழுது!தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி: தற்போது, அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேறிய மாநிலமாகஉள்ளது. இதை பொறுக்க முடியாத அரசியல்வாதிகள் தான், காழ்ப்புணர்ச்சி காரணமாகதவறான கருத்துக்களை கூறுகின்றனர். நிறைவேற்ற முடியாத கனவுகளுடன் வாழும் அந்த அரசியல் தலைவர்களுக்கு மட்டுமே, இப்படிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகள்ஏற்படுகின்றன.டவுட் தனபாலு: நீங்களும் தான் எவ்வளவோ கனவுகளுடன்,2007ல் அரசியலுக்குள் அடியெடுத்து வச்சீங்க... கிட்டத்தட்ட, 18 வருஷமா அரசியல்ல இருந்தும், நீங்க கண்ட கனவுகள் நிறைவேறியிருக்கா என்ற, 'டவுட்' ஏற்படுதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

D.Ambujavalli
செப் 10, 2024 19:08

மெல்ல மெல்ல, படங்களுக்காக 'சமரசம்' செய்யும் நிலை வந்து, இன்னொரு ராஜ்ய சபா சீட் வரை போகாமல் இருந்தால் சரி பாவம், உதயநிதி ஆதரவு project தவிர எதுவுமே கல்வி அமைச்சருக்கு தென்படாதே வசம் ஆக இன்று மஹாவிஷ்ணு மாட்டினார் போக்ஸோ கேஸ் அமுங்கிவிட்டது


angbu ganesh
செப் 10, 2024 15:02

எல்லா பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்க விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கல இதுவும் அந்த பன்னாடைகளின் வழி thondarldan


N Annamalai
செப் 10, 2024 09:07

நடிகர் விஜய் எல்லோருடைய வயிற்றிலும் அடித்து விடுவாரோ என்ற பயம் அனைவருக்கும் வந்து விட்டது என்று மட்டும் தெரிகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை