உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, சுகாதாரதுறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்: அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட அம்மா மினி கிளினிக்கை, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தி.மு.க., அரசு மூடிவிட்டது. தற்போது, அரசு மருத்துவமனைகளில் அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வுக்கு செல்லும்போது, அங்கு மருத்துவர்கள் இல்லாத நிலை தான் உள்ளது. அரசு மருத்துவமனைகளில் துவங்கப்பட்ட அம்மா உணவகங்களும் தற்போது செயல்படவில்லை. அமைச்சர் சுப்பிரமணியன் பேசுவதை குறைத்து, செயல்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும்.டவுட் தனபாலு: 'பேச்சை குறைத்து, செயலில் வீரத்தை காட்டுங்க'ன்னு சொல்றீங்க... ஆனா, என்ன செய்றது, எப்படி செய்றதுன்னு எதுவும் தெரியாமல் தான், அமைச்சர் பேசிட்டும், ஓடிட்டும் இருக்காரோ என்ற, 'டவுட்' எழுவதை தவிர்க்க முடியலை!வி.சி., கட்சி தலைவர்திருமாவளவன்: ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு என்பதுவி.சி.,யின் கொள்கை. இது குறித்து, 1999 முதல் பேசி வருகிறோம்; இதை, எப்போதும்பேசிக் கொண்டே இருப்போம்.எந்த நேரத்தில், எந்த கொள்கையை வலுவாக பேச வேண்டுமோ, அப்போதுபேசுவோம். இது குறித்து இப்போது முதல்வரிடம் பேசவில்லை.டவுட் தனபாலு: இப்ப இல்லை... எப்பவுமே, ஆட்சியில்நீங்க பங்கு கேட்கவே முடியாது... அ.தி.மு.க.,வின் செல்லுார் ராஜுவும், 'அதெல்லாம் ஆகுற கதையில்லை'ன்னு கையை விரிச்சுட்டாரே... அதனால, நீங்க 2999 வரைக்கும் பேசிட்டே இருந்தாலும், காரியம் கைகூடுமாஎன்பது, 'டவுட்'தான்!அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு: தமிழகத்தில், அ.தி.மு.க., - தி.மு.க., என திராவிட கட்சிகள் தான் ஆட்சிக்கு வர முடியும். இங்கு, அ.தி.மு.க., - தி.மு.க., என யார் ஆட்சிக்கு வந்தாலும், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில்பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை. நல்லாட்சிக்கு அது சரிப்பட்டு வராது.டவுட் தனபாலு: அது சரி... நீங்க அரியணையில் அமர மட்டும்,கூட்டணி கட்சிகள் தயவு வேணும்... ஆனா, அவங்களுக்குஆட்சியில் பங்கு தர மாட்டோம்னா என்ன அர்த்தம்... 'நல்லாட்சிக்கு அது சரிப்பட்டு வராது'ன்னு சொல்றீங்களே... 57 வருஷமா நீங்க நல்லாட்சி தான் தந்துட்டு இருக்கீங்களா என்ற, 'டவுட்' வருதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
செப் 18, 2024 18:53

செல்லூறார் unwarranted ஆக ஆளும் கட்சிக்காக ஒத்தூதி நாங்கள் இருந்த காலத்திலும், திரும்ப வந்தாலும், இந்த ‘பங்காளி’ குரல் எதுவும் எடுபடாது என்று கூறி, இவர்கள் தங்கள் பக்கம் வந்தாலும் மூலையில் தான், plastic நாற்காலி தான் என்று சொல்லிவிட்டார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை